திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு
திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கபப்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 13:57 GMT
ஜெயலலிதா நினைவு நாள்
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது .
திருவாரூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மண்டல தலைவர் விஜயகுமார் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகரக் கழகச் செயலாளர் ஆர். டி. மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.