குழாய் சீரமைப்புப் பணி தொடக்கம்

கும்பகோணத்தில் பழுதடைந்த குழாய் சீரமைப்புப் பணி நேற்று தொடங்கப்பட்டது.;

Update: 2024-05-19 09:02 GMT

பழுதடைந்த குழாய் சீரமைப்புப் பணி தொடக்கம்

கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க தஞ்சாவூா் சாலையில் ஹாஜியாா் தெரு சந்திப்பில் மே 16 -ஆம் தேதி திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், சாலையில் பதிக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து, கழிவு நீா் வழிந்து ஓடியது. இதனிடையே, கும்பகோணத்தில் பலத்த மழை பெய்ததன் காரணமாக, மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். இதைத்தொடா்ந்து, சேதமடைந்த பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிதாக குழாய் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

Advertisement

இப்பணியை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், நேரில் பாா்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், பாதசாரிகள் சென்று வர சாலையோரத்தில் பாதை அமைத்துத் தர வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். இப்பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா். அப்போது, கும்பகோணம் மாநகராட்சி துணை மேயா் சு.ப. தமிழழகன், மாநகராட்சி உதவிச் செயற் பொறியாளா் அய்யப்பன், உதவி பொறியாளா் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News