குற்றவியல் வக்கீல் சங்கத்தில் சேமநல நிதிக்கான ஸ்டாம்பு விற்பனை தொடக்கம்

சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்கத்தில் சேமநல நிதிக்கான ஸ்டாம்பு விற்பனை தொடக்கம்;

Update: 2023-12-15 05:15 GMT

சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்கத்தில் சேமநல நிதிக்கான ஸ்டாம்பு விற்பனை தொடக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்கத்தில் சேமநல நிதிக்கான ஸ்டாம்பு விற்பனை நேற்று தொடங்கப்பட்டது. சங்க இடைக்கால நிர்வாக தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பொருளாளர் முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் கோவிந்தராஜன், திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் சரவணன் ஸ்டாம்பு விற்பனையை தொடங்கி வைத்தார். அதனை மூத்த வக்கீல்கள் மணி, ஜெயபால், ராமன், சந்திரசேகரன், தேவிரமணி, இந்துமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வக்கீல் கூட்டமைப்பு துணைத்தலைவர் இமயவரம்பன், இணைச்செயலாளர் கண்ணன், செய்தி தொடர்பாளர் சரவணன், கீர்த்திவர்மன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், அரசு வக்கீல்கள் தம்பிதுரை, மணிகண்டன், மதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News