ஓமலூரில் வளர்ச்சி திட்டங்களுக்கான பணி தொடக்கம்
ஓமலூரில் வளர்ச்சி திட்டங்களுக்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரூர்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் பூசாரிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமார் 70லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன்,
சுப்பிரமணியன் மற்றும் மணிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதையடுத்து பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் மணி இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ், காடையாம்பட்டி சேர்மன் மாரியம்மாள் ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரம்மாள் காங்கேயன், சுமதிவேலு, ஒன்றிய கவுன்சிலர் பசுபதி, சுகன்யா நாராயணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமாக கலந்து கொண்டனர்.