வரியை விரைந்து வசூலிக்க ஆணையர் அறிவுறுத்தல்
திருப்பூர் மாநகராட்சி 45,49வது வார்டுகளில் வரிவிதிப்புக்கான முன் அறிவிப்பு வரி ரசீதை வழங்கி நிலுவையில் உள்ள வரிவசூலை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜி கிரியப்பனவர் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Update: 2024-01-24 07:26 GMT
திருப்பூர் மாநகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட மாநகராட்சி வரிகளை தீவிரப்படுத்தும் விதமாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சிக்குட்பட்ட 49-வது வார்டு, கே.என்.பி.சுப்பிரமணியம் நகர் மற்றும் 45-வது வார்டு, கோம்பை தோட்டம் பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டு நடப்பு ஆண்டுக்கான (2023-2024) வரி விதிப்புக்கான முன் அறிவிப்பு ரசீது வழங்கியும், வரி பாக்கியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.