கரூர் கடை உரிமைதாரர்களுக்கு ஆணையாளர் உத்தரவு
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடை உரிமை தாரர்கள் மார்ச் 24க்குள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை செலுத்த வேண்டும்என ஆணையர் அறிவித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடை உரிமை காரர்கள் மார்ச் 24க்குள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை செலுத்த வேண்டும். ஆணையர் அறிவிப்பு. கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடை உரிமையாளர்கள், அனுபவதாரர்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை எதிர்வரும் 2024 மார்ச் 24ஆம் தேதிக்குள் ஒவ்வொரு வாரமும் சம தவணைகளாக செலுத்த வேண்டும்.
மேலும், வாடகை நிலுவைத்தொகை செலுத்த, உரிமை தாரர்கள், அனுபவதாரர்கள் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் சொத்துக்களை சட்டபூர்வமாக கையகப்படுத்தும் நடவடிக்கையும், உரிமம், பொது ஏலம் விடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் கரூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை பிரதி மாதம் 5ஆம் தேதி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது என கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.