வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-02-14 11:26 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நகர் 1-வது மண்டலத்திற்குட்பட்ட குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சோலார் ரூப் பொருத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் வேலம்பாளையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டுமனை பிரிவுகள் மற்றும் அங்கேரிபாளையம் அருகே உள்ள பாலு இன்னோவேஷனில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டுமனை பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.