வேளாண்மை உழவர் நல அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை உழவர் நல அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில் விவசாயிகள் குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-11 16:21 GMT

பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திருச்சி மாவட்டம மண்ணச்சநல்லூர் வேளாண்மை அலுவலர் சௌமியா தலைமை வகித்து கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டங்களைப் பற்றியும் மர பயிர்களின் முக்கியத்துவம் எடுத்துரைத்தார்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா தோட்டக்கலை பயிர்களின் ஒருங்கிணைந்த பண்ணையம் எவ்வாறு மேற்கொள்வது குறித்து எடுத்துரைத்தார். மேலும் காளான் வளர்ப்பு ,தேனி வளர்ப்பு பற்றி எடுத்துரைத்தார். விதைச்சான்று அலுவலர் ரமேஷ் அசோலாவின் பயன்பாடு மற்றும் மீன் குட்டை எவ்வாறு மேற்கொள்வது குறித்து எடுத்துரைத்தார்.

துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் முன்னோடி விவசாயிகள் பற்றி எடுத்துரைத்தார். கால்நடைத்துறை சரஸ்வதி ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடையின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார் .இபபயிற்சியிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கௌசிகா மற்றும் ஸ்வேதா மேற்கொண்டனர்.

Tags:    

Similar News