தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு

பள்ளிபாளையம் அடுத்துள்ள பாதரை ஊராட்சியில் பாதை வசதி கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-27 02:27 GMT

பள்ளிபாளையம் அடுத்துள்ள பாதரை ஊராட்சியில் பாதை வசதி கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம் அடுத்துள்ள பாதரை ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டமானது நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பாதரை, வேப்பங்காடு, மற்றும் வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் போதிய பாதை வசதி இல்லை எனவும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கந்தசாமி என்பவர் கூறும் பொழுது வேப்பங்காடு, வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் எங்கள் வீடுகளுக்கு செல்லும் ஒரே பாதை வழியில் பாதரை மயானம் முதல் ஆனங்கூர் எல்லை வரை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்... எங்கள் வீடுகளுக்கு செல்ல இந்த ஒரு பாதை மட்டுமே உள்ளதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பெரியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மற்றும் விவசாய செய்ய மிகவும் சிரமமாக உள்ளது.  இந்த ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டுமென பலமுறை கிராம நிர்வாகத்திடமும் பஞ்சாயத்து தலைவரிடமும், ,கிராம நிர்வாக அலுவலர்களிடமும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், தமிழக முதல்வருக்கும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்காததால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்..

இதனை அடுத்து பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் . அதில் எதிர்வரும்  மூன்று தினங்களுக்குள் நில அளவீடு செய்யபட்டு,  நிலம் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய அதிகாரிகளின் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்..இதனால் அங்குசிறிது நேரம்  பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags:    

Similar News