பொய் வழக்கை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் மனு

கன்னியாகுமரியில் பொய் வழக்கை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் மனு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-23 01:24 GMT
கன்னியாகுமரியில் பொய் வழக்கை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் மனு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நாகர்கோவில்  அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்டபொம்மன் சந்திப்பு சாலை பகுதியை   செப்பனிட வலியுறுத்தி,  கடந்த 28-09-2019 அன்று நாற்று நடும் போராட்டம் நடத்தப்பட்டது.         

இதற்காக கட்சி சார்பில்   கோட்டாறு காவல் ஆய்வாளருக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கடிதம் வழங்கியது. திட்டமிட்டபடி நாற்று நடும் போராட்டம் நடத்தி 18 பேர்  கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .          போராட்டம் நடத்தி சாலை சீரமைக்கப்பட்டு 4ஆண்டுகள் கடந்த நிலையில் யாருக்கும் முறையாக சமன் வழங்காமல் தவறான தகவல்களின் அடிப்படையில் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை  திரும்பப்பெறக்கோரி, குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இன்று  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.        

இந்த நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தா.சுபாஷ் சந்திர போஸ், அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணைத் தலைவர்  பேராசிரியர் எஸ்.சுந்தரம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத்தலைவர் எஸ்.கே.கங்கா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் குமரி மாவட்ட செயலாளர் செல்வராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News