அன்னவாசலில் இந்திய கம்யூனிஸ்ட் அமைப்பு நாள் கொண்டாட்டம்

அன்னவாசல் மற்றும் சித்தன்னவாசல் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் அமைப்பு நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றப்பட்டது.

Update: 2023-12-28 01:09 GMT

கொடியேற்றம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 99- ஆவது அமைப்பு முன்னிட்டு அன்னவாசலில் தியாகி கே.ரங்கசாமி மேடையில் நினைவு கொடி கொடியேற்றி வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதேபோல், சித்தன்னவாசல், ஒன்றியத்தில் நல்லம்மாள் சத்திரம், சத்தியமங்கலம் உள்ளிட்ட 52 கட்சிக் கிளை அலுவலகங்களில் கட்சியின் கொடியேற்றி வைக்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் தர்மராஜன், நிர்வாகிகள் நாகராஜ், ராமன், ராஜேந்திரன், மீரா உள்ளிட்ட மைதீன் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.
Tags:    

Similar News