குலசேகரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கனிம வளம் கடத்தல் கண்டித்து குலசேகரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் கனிம வளங்களை கடத்தி அதிவேகமாக சென்று மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் டாரஸ் லாரிகளை கண்டித்தும், உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்கள், காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடுகள் வழங்க வலியுறுத்தியும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரம் காவல்ஸ்தலம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். செல்வசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் எம் எல் ஏ வுமான லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, தங்க மோகனன், ரெஜிஷ்குமார், சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் விசுவாம்பரன், வில்சன், சசிகுமார், ஆண்டனி, ராஜதாஸ், ரவி, வட்டாரக்குழு உறுப்பினர்கள் சௌந்தர், ராவிதாஸ்,
ஜெயச்சந்திரன், சுபாஷ், கென்னடி, வினோஜா தங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.