திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ் கட்சி மறியல் போராட்டம்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றில் திருப்பூண்டி துணை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ் கட்சி மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-16 14:17 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றில் திருப்பூண்டி துணை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ் கட்சி மறியல் போராட்டம் நடைபெற்றது  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கங்கள்  சார்பில்   விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ரேசன் முறையை பலப்படுத்த வேண்டும்,

விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்,100நாள் வேலைத்திட்ட நாட்களை 200 நாட்களாக்கி தினக்கூலியாக ரூ 600 வழங்க வேண்டும், குறைந்த பட்ச மாத ஊதியம் 26000 வழங்க வேண்டும்,

அமைப்பு சாரா தொழிலாளிகளை அரசின் கடைநிலை ஊழியர்களாக அங்கீகரித்திட வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஒன்றிய அரசை கண்டித்து   திருப்பூண்டியில் உள்ள துணை அஞ்சலகம் முன்பாக போராட்டம்  நடைபெற்றது.ஏஐடியுசி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையன் தலைமையில் நடைபெற்ற மறியல் பேரராட்டத்தை  மாநில குழு உறுப்பினர்  செல்வம் தொடங்திவைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  ஆர்ப்பாட்டத்தில்  விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,

விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன், ஒன்றிய தலைவர் .ராமலிங்கம், சிபிஐ ஒன்றிய குழு உறுப்பினர்கள் .இளையராஜா,ராஜீவ்,கிளை செயலாளர் எம்.காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Tags:    

Similar News