சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகை
பையர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் சாலை விபத்தில் இறந்ததற்கு தாராபுரம் வருவாய் கோட்டத்தில் இருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டது.
Update: 2024-02-24 01:07 GMT
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று 23.02.2024 நடைபெற்ற பிறப்பு இறப்பு சான்று விசாரணை மற்றும் சாலை விபத்து நிவாரணம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் பையர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் த/பெ சின்னத்தம்பி என்பவர் ஈரோடு மாவட்டம், தாராபுரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததற்கு ஈரோடு மாவட்டம், தாராபுரம் வருவாய் கோட்டத்தில் இருந்து வரப்பெற்ற சாலை விபத்து நிவாரண தொகை ரூபாய் ஒரு இலட்சத்திற்க்கு உண்டான காசோலையை 24 மணி நேரத்திற்குள் இறந்த மாணிக்கம் என்பவரின் தந்தை சின்னத்தம்பி என்பவருக்கு நேற்று மாலை அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் அவர்களால் வழங்கப்பட்டது.