போட்டித் தேர்வு: கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு 

தஞ்சாவூரில் போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.;

Update: 2024-05-28 14:37 GMT

தஞ்சாவூரில் போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி–I பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு 13.07.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக டிஎன்பிஎஸ்சி குரூப்-I தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.  இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றுவருகிறது.  பயிற்சி வகுப்பில் பங்கேற்க அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்தல் அவசியம். 

டிஎன்பிஎஸ்சி தொகுதி -I க்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்பான விபரங்களை 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த டிஎன்பிஎஸ்சி தொகுதி –I தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கட்டணமில்லா இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News