இணையவழியில் ஏமாற்றபட்டதாக போலீசில் புகார்
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 10:02 GMT
இணையவழி மோசடி
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் இந்திய விமானபடையில் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த செப்படம்பர் மாதத்தில் பகுதிநேர வேலை வாய்ப்பு என வாட்ஸ்ஆப் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதனை நம்பி பணம் அனுப்பி டாஸ்க் மூலம் விளையாடி உள்ளார். அவ்வாறு விளையாடும்போது, பணம் வென்றதுபோல டிஜிட்டல் ஸ்கிரின்ஷாட் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தான் ஏமாந்து போனதை அறிந்த பிரகாஷ், 19 லட்சத்தி 60 ஆயிரத்தி 800 ரூபாயை இணையவழி மூலம் ஏமாந்து போனதாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சைபர்க்ரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்