நிதி நிறுவனத்தின் மோசடி குறித்து புகார்
திண்டுக்கல் அருகே நிதி நிறுவனத்தில் மோசடி நடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கொதிப்பு
Update: 2024-02-15 09:04 GMT
திண்டுக்கல் அருகே நிதி நிறுவனத்தில் மோசடி நடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கொதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு மனு கொடுத்துக் கூறியதாவது: பெருமாள்மலை SMC கோ ஆப்பரேட்டிவ் ஹவுஸிங் பில்டிங் சொசைட்டி நிறுவனத்திடம் இருந்து வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.2 கோடியே 79 ஆயிரத்து 749 பணத்தை மீட்டுத் தர வேண்டும். பலரிடம் மூளைசலவை செய்து பணத்தை வசூலித்தார்கள். தற்போது அதற்கான பலன்களை தர மறுக்கிறார்கள். இதனால் ஏழை,எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே பணத்தை மீட்டு தர வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் நாங்கள் குதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று கூறினார்கள்.