திமுக நிர்வாகி மீது ஆட்சியரிடம் புகார் மனு

தூத்துக்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலியான விவசாயிகள் பெயரில் பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவரும் திமுக நிர்வாகி வி பி ஆர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார்

Update: 2024-01-24 05:10 GMT

திமுக நிர்வாகி மீது ஆட்சியரிடம் புகார் மனு

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசள் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் வாழை விவசாயி இவர் குலையன்கரிசள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை அணுகி விவசாய கடன் கேட்டுள்ளார். ஆனால் விவசாய கடனை வழங்காமல் கூட்டுறவு சங்க தலைவரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளரான வி பி ஆர் சுரேஷ் மற்றும் சங்க செயலாளர் ராஜேஸ்வரி கடன் வழங்காமல் இழுத்து அடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சாமுவேல் விவசாயிகளிடம் தகவல் கேட்டதில் திமுக நிர்வாகியும் கூட்டுறவு சங்கத் தலைவருமான வி பி ஆர் சுரேஷ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் மற்றும் விளைநிளங்கல் இல்லாத நபர்களை போலியாக விவசாயிகள் என்ற பெயரில் சங்கத்தின் உறுப்பினர் ஆக்கி பல லட்ச ரூபாய் கடன் வழங்கி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டுறவு சங்கத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரத்தை கள்ளச் சந்தை யில் முறைகேடாக விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது மேலும் ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் கடன் வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயி சாமுவேல் இவ்வாறு கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகியும் கூட்டுறவு சங்க தலைவர் வி பி ஆர் சுரேஷ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தார்
Tags:    

Similar News