முன்னாள் நீதிபதி மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
ஆண்டிபட்டி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மற்றொரு தரப்பினர் மனு அளித்தனர்.;
Update: 2024-03-19 06:22 GMT
மனு அளிக்க வந்தவர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்துக்குட்பட்ட பொன்னம்மாள் பட்டியை சேர்ந்த சுப்புராஜிடம் ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் கோழிப்பண்ணை நடத்த 3.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பணத்தை அருண்ராஜ் கேட்ட பொழுது சுப்புராஜ் மனைவி பழனியம்மாள் தான் முன்னாள் நீதிபதி எனக் கூறி கொலை மிரட்டல் விடுவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருண்ராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்