மனைவியை தாக்கிய கணவன் மீது புகார்
விருதுநகர் மாவட்டம்,மீசலூர் பகுதியில் மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-10 06:47 GMT
மனைவியை தாக்கிய கணவன் மீது புகார்
விருதுநகர் அருகே உள்ள மீசலூர் பகுதியைச் சார்ந்தவர் எப்ஸியா. இவர் அதே பகுதியைச் சார்ந்த ஈஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்வரன் குடித்துவிட்டு தினமும் வந்து மனைவியை சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததாகவும், செலவுக்கு சரி வர பணம் கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் வீட்டிலிருந்த குக்கரால் மனைவியை ஈஸ்வரன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த எப்சிபா விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.