சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக புகார்

அனைக்கட்டு அருகே கரடிகுடியில் சட்டவிரோதமாக கல்குவாரி பினாமியாக அதிமுகவினர் நடத்துவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் மனு அளித்தனர்.

Update: 2024-01-24 02:47 GMT

புகார் மனு அளித்த கிராம மக்கள்

வேலூர் மாவட்டம், அனைக்கட்டு அருகேயுள்ள கரடிகுடி கிராமத்தில் சட்டவிரோதமாக கல்குவாரியை அதிமுகவினர் சிலர் பினாமி பெயரில் நடத்துவதாக அரசு சார்பில் அக்கல்குவாரியை மூடி பல கோடி அபராதம் விதித்தனர். ஆனால் தற்போது அதிமுகவினர் சிலர்பினாமியாக கல்குவாரியை நடத்தி வருகின்றனர் .

இக்கல்குவாரி அனுமதி காலாவதியாகி சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது . வெடி வைப்பதால் சுற்றியுள்ள வீடுகளில் உள்ள மக்களுக்கு பல்வேறு உடல் நோய்கள் ஏற்படுவதுடன் சுற்றுசூழலும் கடுமையாக பாதிக்கபடுவதாக அனுமதியின்றி கல்குவாரி நடத்துபவர்களின் மீது உரிய நடவடிக்கையை எடுக்க கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News