ஒப்பந்ததாரர் மீது நகராட்சி ஆணையாளர் எஸ்பி அலுவலகத்தில் புகார்
பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்;
Update: 2023-12-04 03:54 GMT
எஸ்.பி அலுவலகத்தில் புகார்
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை நகராட்சியின் முதல் நிலை ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவருக்கு டெண்டர் நிலவைத் தொகை உள்ள நிலையில் அதனை கேட்பதற்காக நகராட்சி அலுவலகம் சென்றுள்ளார். அப்போது ஆணையாளர் வெங்கட லட்சுமணன் காணொளி மூலமாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். நகராட்சியின் உள்ளே சென்ற கந்தசாமி மற்றும் சிலர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவாக பேசியதாக சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் ஆணையாளர் புகார் மனு அளித்துள்ளார்.