திருந்தி வாழ்பவர்களை தவறு செய்ய கூறுவதாக போலீசார் மீது புகார்
சாராயம் விற்காமல் திருந்தி வாழும் குடும்பத்தினரை. மீண்டும் சாராயம் விற்க வலியுறுத்தி பொய் வழக்கு போடும் மயிலாடுதுறை காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில், மனு கொடுத்தனர்
Update: 2024-01-24 07:15 GMT
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தூக்கானங்குளம், கீழ்கரையில் வசிப்பவர் மகேஸ்வரி இவரது கனவர் வினோத். இவரது மாமனார் பாஸ்கர். இவர்.கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம், விற்று வந்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு அக்குடும்பத்தினர் சாராய வியாபாரம் செய்யாமல், திருந்தி குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பணியாற்றும், சுபஸ்ரீ, முகிலன் ஆகிய காவல் அதிகாரிகள், கடந்த 18/1/2024 வீடுபுகுந்து இவர்களை சாராயம் விற்று கொண்டு எங்களுக்கு மாமுல் தரவேண்டும் என மிரட்டி, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து உள்ளனர் மேலும் இவர்களது உறவினர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு கொடுமை செய்துவருவதாகவும். இனியும் எங்களால் உயிரோடு வாழ முடியாது எனக் கூறி, திருந்தி வாழும் எங்கள் குடும்பத்தினரை மீண்டும் சாராயம் விற்ககோரி, பொய் வழக்கு போடும், மயிலாடுதுறை காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.