தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம் - ஆட்சியர்
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர்,தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்,காவல்துறை பார்வையாளர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தமிழகத்தில் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர், காவல்துறை பார்வையாளர் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் கவாலிகட்டி, அவர்களை 8807491553 என் அலைபேசி அல்லது 0451-2461149 என்ற தொலைபேசி வாயிலாகவும் தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத் அவர்களை 8807491563 என்ற அலை பேசி அல்லது 0451-2461148 என்ற தொலைபேசி வாயிலாகவும் காவல்துறை பார்வையாளராக மனோஜ்குமார் அவர்களை 7550175363 என்ற அலைபேசி அல்லது 0451-2911179 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.