பேவர் பிளாக் அமைத்ததாக கூறி மோசடி புகார்

பேவர் பிளாக் அமைத்ததாக கூறி மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2024-06-06 00:45 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாக்குட்பட்ட கூத்திப்பாறை கிராமத்தில் கவிதா வீடு முதல் கோதண்டபாணி வீடு வரைரூபாய் 4 ல்டத்தி 43 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்ததாக கூறி மோசடி செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீதும் அவரது கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ஊரவளர்ச்சி திட்ட இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை மனு. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாக்கு உட்பட்ட மலைப்பட்டி ஊராட்சியில் கூத்திப்பாறை கிராமம்உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் அருந்ததியர் காலனியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த காலணியில் கவிதா வீடு முதல் கோதண்டபாணி வீடு வரை சுமார் 4 லட்சத்தி 43 ஆயிரம் மதிப்பீட்டில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு சாலையில் பேவர் பிளாக்கல் போடாமல் போட்டதாக கூறி ஊரட்சி மன்ற தலைவர் குண சுதா மற்றும் அவரது கணவர் சுதாகர் மோசடி செய்ததாகவும், இதுசம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் குணசுதாவை கேட்ட போது முறையாக பதில் சொல்லாமல் அங்கு வசிக்கும் ஆதிக்கசாதியினருக்கு ஆதரவாக பேசி தங்களை இழிவுபடுத்தியதாகவும் ஆகையால் தான் இன்று ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனரை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Tags:    

Similar News