தலைவர் மீது முறைகேடு புகார்; நம்பிக்கையில்லா ஓட்டெடுப்புக்கு உத்தரவு

கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் மீது முறைகேடு புகார் எழுந்ததால், வரும் 18ல் நம்பிக்கையில்லா ஓட்டெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-12-07 15:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவியாக பிரியா உள்ளார். இவர், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அக்கட்சியில் இணைந்தார். இவர் மீது, அதே கட்சியை சேர்ந்த துணைத் தலைவர் விஜேந்திரன் தலைமையில் கவுன்சிலர்கள், 5 பேர், அ.தி.மு.க.,வின், 4 பேர் என, 9 கவுன்சிலர்கள், முறைகேடு புகார், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, கடந்த அக்டோபரில், சேலம் கலெக்டர் கார்மேகத் திடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷூக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். நவ., 16ல், நாகியம்பட்டியில் உள்ள பிரியா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன், ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர் வீட்டில் இல்லை. இதனால் கதவில், 'நோட்டீஸ்' ஒட்டினர். அதில், 'ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், 15 நாளில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று, தலைவி, துணைத்தலைவர், கவுன்சிலர்கள் உள்பட, 11 பேரிடம், ஆத்துார் ஆர்.டி.ஒ., ரமேஷ் உத்தரவிட்ட தபாலை, ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் வழங்கினர். அதில், பிரியா மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும், 18 மதியம், 3:00 மணிக்கு கெங்கவல்லி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஆர்.டி.ஓ., தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. என

Tags:    

Similar News