பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-27 14:20 GMT
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் 22-2-24 அன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற பிஜேபி பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியுள்ளதாக குருவிகுளம் ஒன்றிய திமுக சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் குருவிகுளம் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் குட்டி தலைமையில் குருவிகுளம் காவல்நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News