மலைக்குறவருக்கான எஸ்.டி.ஜாதி சான்றிதழ் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு அளித்தனர்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில அவைத்துணைத்தலைவர் முத்து தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து மலைக்குறவர் எஸ்.டி.ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாகவும் சாதி சான்றிதழ் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம், அளக்குடி, ஆச்சாள்புரம், கொடக்காரமூலை, புதுப்பட்டினம், பூம்புகார், திருவெண்காடு, சீர்காழி, புத்தூர், மணல்மேடு, பட்டவர்த்தி, திருமுல்லைவாசல், பனங்காட்டான்குடி, கடலங்குடி, ஆத்தூர், திருமங்கலம், மல்லியம். மாப்படுகை, குத்தாலம். நீடூர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம்.
எங்கள் பிள்ளைகள் படிப்பிற்கு மலைக்குவர் எஸ்.டி ஜாதி சான்றிதழ் கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் பிள்ளைகளில் கல்வி பாதிப்படைந்து மிகவும் பின்தங்கிய நிலைக்கு நாங்கள் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மேற்படி கிராமங்களில் வசிக்கும் குறிஞ்சி நிலமக்களுக்கு இந்து மலைக்குறவன் இனத்தவர்ளாகிய எங்களுக்கு எஸ்.டி.மலைக்குறவன் என்று ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே கோரிக்கைக்காக மனுகொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.