மோசடி நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க புகார்
நாகர்கோவில் எஸ் பி அலுவலகத்தில் மோசடி நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.
Update: 2024-03-19 14:59 GMT
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (60).இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் எனது அவசர தேவைக்காக 10 லட்சம் கடன் பெற்றேன். இதற்காக எனது 8 சென்ட் நிலத்தை கிரைய பத்திரமாக அளித்திருந்தேன். இதற்கான மாதந்தோறும் வட்டி கட்டியுள்ளேன். ஒரு சில மாதங்களில் தாமதமாக கட்டியதற்காக கூடுதல் அபராத வட்டி வசூலித்தனர். இந்த நிலையில் மாதவட்டி வட்டி தின வட்டியாக மாற்றிவிட்டது என்று என்னிடம் கூறி அதிகமாக வட்டிக்கு பணம் கேட்டனர். இதனால் வட்டி மற்றும் கடன் தொகையை தந்து விடுகிறேன் என்றேன். ஆனால் அந்த நிறுவனத்தினர் என்னை மிரட்ட தொடங்கி உள்ளனர். சொத்து எங்கள் வசமாகிவிட்டது இனி சொத்தை தர மாட்டேன் என்று கூறி மிரட்டி அனுப்பினர். பத்து லட்சத்திற்கு 8 சென்ட் நிலத்தை அபகரித்துவிட்டனர். அதன் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும். எனவே எனது சொத்தை மீட்டு, சதி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை போன்று நிறைய பொதுமக்களை ஏமாற்றி பலகோடி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.