டூவீலர்கள் திருட்டு குறித்து புகார்

குமாரபாளையத்தில் இரண்டு டூவீலர்கள் திருடு போனது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-10 16:26 GMT

 குமாரபாளையத்தில் இரண்டு டூவீலர்கள் திருடு போனது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கம்பர் தெருவில் வசிப்பவர் சூர்யநாராயணன், 62. விசைத்தறி கூலி. இவர் டிச. 26ல் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக, மருத்துவமனை முன்பு காலை 08:50 மணிக்கு, தனது டி.வி.எஸ். 50 வாகனத்தை வெளியில் நிறுத்தி, பூட்டி விட்டு சென்றார். சிகிச்சை செய்து கொண்டு வெளியில் வந்து பார்த்த போது, வெளியில் நிறுத்தி வைத்த டூவீலரை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டார் என முடிவு செய்து, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி, குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் சுரேஷ், 41. சுமை தூக்கும் தொழிலாளி. டிச. 21ல் மாலை 13:15 மணியளவில் குமாரபாளையம் இடைப்பாடி சாலை, புளியமரம் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஓட்டல் கடையில் சாப்பிட சென்றார். தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தை கடையின் முன்பு நிறுத்தி பூட்டி சென்றார். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பார்த்த போது தனது டூவீலரை காணாதது கண்டு அதிர்ச்சியுற்றார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.   இரு புகாரை பெற்ற குமாரபாளையம் போலீசார், காணாமல்  போன டூவீலர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News