சமரச தீர்வு மைய ஊர்வலம்
சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
Update: 2024-04-12 04:38 GMT
திருக்கோவிலுார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பில், சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிரஸ்தார் ரமேஷ் வரவேற்றார் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் குமார் முன்னிலை வகித்தார். சார்பு நீதிமன்ற நீதிபதி இளவரசி தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சரவணகுமார், சமரசமைய வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.