மழைநீர் கால்வாய் பணியில் சுணக்கம் - விபத்து அபாயம்
வெள்ளைகேட் சர்வீஸ் சாலையோரத்தில் சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்ட்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளைகேட் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையோரம், பொன்னேரிக்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் மற்றும் அரக்கோணத்தில் இருந்து, வெள்ளைகேட் மேம்பாலம் வழியாக, வேலுாருக்கு வாகனங்கள் செல்கின்றன. இதுதவிர, திருப்பதி நகர் வழியாக, கரியன் கேட்டிற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்துதிருப்பதி நகர், வெள்ளை கேட் மேம்பாலம்வழியாக வேலுாருக்கு வாகனங்கள் செல்கின்றன.
சமீபத்தில், வெள்ளைகேட் சர்வீஸ் சாலை யோரம் மழைநீர் கால்வாய் சேதமடைந்தது. இதை சீரமைப்பதற்காக,கால்வாய் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின், கட்டுமான பணிகள் நடைபெற்றன. ஆனால், பணிகள் முழுமை பெறாமல், பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், அந்தசர்வீஸ் சாலை வழியாகசெல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறிகவிழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்."