மாவட்ட பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு
மயிலாடுதுறையில் மாவட்ட பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாட்டை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகள் என மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய 5 ஒன்றியங்களில் 488 அரசுப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. பள்ளியின் தரத்தையும், மாணவர்கள் வருகையையும் உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவரும் பள்ளி மேலாண்மைக்குழுவினருக்கான ஒருநாள் மாநாடு மயிலாடுதுறை தருமை ஆதீனக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை ஏற்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்டக் கல்வி அலுவலர் ஞானசேகரன், தொடக்கப்பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் 488 நபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். நமது மாவட்டம் சென்ற கல்வியாண்டில் பொதுத் தேர்வில் 38வது இடத்தைப் பெற்றுள்ளது- மாணவர்கள் மட்டும் காரணமல்ல அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.வரும் காலங்களில் இதுபோன்ற குறைவான ரிசல்ட் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக்கொண்டார்.