தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல்

பள்ளிபாளையத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 4 கிலோ குட்கா பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2024-02-19 09:55 GMT
பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில், அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றியுள்ள ஒட்டமெத்தை, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் குமாரபாளையம் பள்ளிபாளையம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரங்கநாதன் மற்றும் பள்ளிபாளையம் போலீசார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த மசாலா குட்கா பொருட்கள் விற்பனை செய்த சரஸ்வதி மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கடைகளில் இருந்து சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News