தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!
வேலூர் மாநகராட்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Update: 2024-04-27 08:26 GMT
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட ரயில்வே நிலைய பகுதிகளில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.அவர்கள் 9 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 2 கடைகளுக்கு ரூ.500 வீதம் 2 கடைக்கு ரூ.1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.