மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது;
Update: 2023-12-15 05:36 GMT
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
உளுந்துார்பேட்டை தாலுகா வைப்பாளையம் அருகே ஆற்று மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருநாவலுார் சப்இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஆற்று மணல் கடத்திய மாட்டு வண்டியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து வைப்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் மகன் சேதுபதி,27; கைது செய்தனர்.