மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
திருமணி கிராமத்தில் மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-05-09 15:27 GMT
மணல் கடத்தல்
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமணி கிராமத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபர் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மணலுடன், மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.