மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்!
கருகம்பத்தூர் பாலாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்த முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-03-25 13:36 GMT
வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் பகுதியில் விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருகம்புத்தூர் பாலாறு அருகே ஒருவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் அதனை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அருகே சென்று மாட்டு வண்டியை சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.