குட்கா பொருட்கள் பறிமுதல்

அரகண்டநல்லுாரில் விற்பனைக்காக காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-03 11:29 GMT

குட்கா பறிமுதல்

அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் மார்க்கெட் கமிட்டி எதிரே நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த போர்டு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 99 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. விசாரணையில், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனுாரைச் சேர்ந்த குமார் மகன் அருண், 34; வீரபாண்டியைச் சேர்ந்த தண்டபாணி மகன் ரியாஸ், 30; என்பதும், விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. உடன், குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News