உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
நத்தம் அருகே பள்ளப்பட்டி பிரிவில் நடந்த சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.;
Update: 2024-03-23 06:27 GMT
நத்தம் அருகே பள்ளப்பட்டி பிரிவில் நடந்த சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பள்ளபட்டி பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நத்தம் நோக்கி சென்ற மினி வேனை மறித்து பறக்கும் படை அதிகாரி கண்ணன் சோதனை நடத்தினர். இதில் அந்த வாகனத்தில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 600 பணம் இருந்தது.
இது தொடர்பாக வேனில் வந்த கோட்டையூரைச் சேர்ந்த சேக் அப்துல்லா மற்றும் சேக் அலாவுதீன் ஆகியோரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.