உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
சின்னசேலம் அருகே ஆவணமின்றி வேர்க்கடலை வியாபாரி எடுத்துச் சென்ற 1.29 லட்சம் ரூபாயை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-31 09:18 GMT
பணம் பறிமுதல்
சின்னசேலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அசோக் தலைமையிலான பறக்கும் படை குழுவினர், நேற்று காலை 10:15 மணியளவில் குரால் - கூகையூர் சாலையில், வீரபயங்கரம் பிரிவு சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், கள்ளக்குறிச்சி அடுத்த பெருமங்களத்தைச் சேர்ந்தவர் வீரப்பன், 50; வேர்க்கடலை வியாபாரியான இவர், சில தினங்களுக்கு முன் வேப்பந்தட்டையை சேர்ந்த ஒருவரிடம் கடனாக வாங்கிய 1.29 லட்சம் ரூபாயை கொடுப்பதற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமியிடம் ஒப்படைத்தனர்.