திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல் !
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி ரூ.48 ,752,000 பணத்தினை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-20 11:52 GMT
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 48,75,200 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 64 பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலை, புதுப்பாளையம் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு திருமால் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்டவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், ஒள்ளூர் தாலுக்கா, வெள்ளுட்டுக்கள் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே.ஜோஸ் மகன் ஆர்.கே. வில்லியம்ஸ் (வயது 42) என்பவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே இடம் பெற்ற பணம் என கூறப்படுகிறது. அதனை சொகுசு காரில் 48 லட்சம் ருபாய் பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதனை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். இதே போல் கோவில் வழி அருகே ஈஸ்வரன் என்பவர் 75 ஆயிரத்து 200 ரூபாய் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததை தொடர்ந்து அதையும் பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட 48 லட்சத்து 75 ஆயிரத்து 200 ருபாய் பணத்தை மாநகராட்சி ஆனையாளரும் உதவி தேர்தலில் நடத்தும் அலுவலரமான பவன்குமார் ஜி. கிரியப்பவர் இ.ஆ.ப., முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்துக்கு அனுப்பப்பட்டது.