ரயிலில் கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த இருந்த ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.;
Update: 2024-06-09 10:07 GMT
ரேஷன் அரிசி கடத்தல்
அரக்கோணம் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வரும் ரயில்களில் சோதனை செய்தனர். அதன்படி 3-வது பிளாட்பாரத்தில் அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில் பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் 15 பைகளில் சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.