கூட்டுறவு வங்கிகளில் குளறுபடி: ஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம்!
தூத்துக்குடியில் கூட்டுறவு வங்கிகளில் குளறுபடி காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை குற்றம்சாட்டியுள்ளார்.;
பைல் படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் குளறுபடி காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ் ஏசாதுரை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி கிராம பகுதியில் உள்ள ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் சாா்பில் கூட்டுறவு வங்கி தேர்தல் முறையாக நடைபெற்று.
அதற்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் நல்ல முறையில் இயங்கி ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன் காக்கும் வகையில் சிறு தங்க நகைக்கடன், விவசாய கடன், சிறு தொழில், வியாபார மானிய கடன் வங்கியில் வைப்பு தொகை சேமிப்பு கணக்கு இவை அனைத்தும் 1991ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட்டு பல்வேறு வகையில் வழங்கப்பட்டு செயலாற்றிய நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்கள் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு 5 சவரன் நகை திருப்பி வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வழங்கியது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு அதில் சில நடைமுறைகளை பின்பற்றினால் தான் வழங்க முடியும் என்று திமுக அரசு கூறி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் பல தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் எதிா்பாராத கன மழை பெய்து வௌ்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். கூட்டுறவு வங்கிகளில் தலைவர்களின் பதவிக்காலம் முடிவு பெற்றுள்ளதால் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி அவர்களது நேரடி பார்வையில் இருந்து இயங்குவதால் அதிகாாிகள் மூலம் பல்வேறு வகையான கடன்கள் வழங்குவதற்கு வாய்ப்புகள் ஏற்படுகிறது.
ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லாத காரணத்தால் வங்கிகளுக்கு கடன் உதவி கேட்டு வருபவர்களுக்கு வழங்க முடியாத நிலை வருகிறது. இதை கருத்தில் கொண்டு திமுக அரசு துறை சார்ந்த அதிகாாிகள் கூட்டுறவு துைற அமைச்சர் சக்கரபாணி, ஆகிேயார் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அதற்கான உத்தரவு களை பிறப்பித்து கடன்கள் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வங்கியின் மென்பொருள் மாற்றப்பட்டு அதன் பின் வங்கி சேவைகள் சாிவர செய்ய முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் வங்கியின் பதிவுகள் சேமிப்பு கணக்கு சேவை முதலீடுக்கான வட்டி வழங்குதல் நடைமுறையில் தவறுகள் ஏற்படுகின்றன. இதனால் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்று தவறும் பட்சத்தில் கூட்டுறவு வங்கி முன்பு அதிமுக முன்னாள் முதலமைச்சரும் எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.