சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு

ஏற்காட்டை நிர்வாக வசதிக்காக ஆத்தூர் உடன் சேர்க்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக பரவி வருகிறது.

Update: 2024-01-24 09:33 GMT
வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்ட காட்சி.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டை நிர்வாக வசதிக்காக ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஏற்காட்டை ஆத்தூர் உடன் சேர்க்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் ஒன்றுகூடி ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் ரவிச்சந்திரன்னிடம் ஏற்காட்டை ஆத்தூர் உடன் இணைக்க கூடாது என மனு ஒன்றை வழங்கினார்.

மேலும் அவ்வாறு ஆத்தூர் உடன் இனைக்கப்பட்டால் ஏற்காடு வாழ் மக்கள் அணைவரும் மிகுந்த சிரத்தை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கூறுகையில் தங்களிடம் இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் இல்லை எனவும் எந்த ஒரு ஆலோசனை நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News