நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் நேரில் அழைத்து காவல்துறையின் சார்பாக தனது வாழ்த்தினார்.

Update: 2024-05-03 14:23 GMT

எஸ்பி வாழ்த்து

பொதுமக்களுக்கு அரிய தகவல்களை அவ்வப்போது அளிப்பதில் பத்திரிகைகளும், ஊடகங்களும் முக்கியப் பங்கினை வகிப்பதால், பத்திரிகைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் நாள் உலக பத்திரிகை சுதந்திர நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அதன் படி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில் நேரில் அழைத்து காவல்துறையின் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து பேசுகையில் இந்த நன்னாளில், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் .ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவி தைரியமாக பல்வேறு உண்மை செய்திகளை மக்கள் முன்பு கொண்டு செல்வது ஒரு நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்க்கு வழி வகிக்கிறது எனவும்,

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பத்திரிகைகளும், ஊடகங்களும் இன்றியமையாதவையாக இருக்கிறது எனவும் இவ்வாறு அறம் தவறாமல் பத்திரிக்கை துறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News