காங்கிரஸ்  வேட்பாளர் விஜய்வசந்த் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு 

நாகர்கோவிலில் காங்கிரஸ்  வேட்பாளர் விஜய்வசந்த் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-03-29 18:11 GMT

தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகின்றார்           

இன்று மதியம்  கோட்டார் இளங்கடை பாவாகாசிம் வலியுல்லா பள்ளிவாசல் மற்றும் அல்மஸ்ஜீதுல் அஷ்ரஃப் ஜூம்மா பள்ளி வாசல் அருகே வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் இந்தியா கூட்டணி சார்பில்  காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் தனக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் முன்னதாக வாக்கு சேகரிப்பதற்காக அங்கு வந்த வேட்பாளருக்கு இஸ்லாமியர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் தாங்கள் அணிந்திருந்த குல்லாவை  வேட்பாளருக்கு அணிவித்தனர்.          இந்த வாக்கு சேகரிப்பின் போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட  காங்கிரஸ் கட்சி தலைவர் கே.டி.உதயம், வி. சி. க மாவட்ட செயலாளர் காலித், மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News