காங்கிரஸ் நிர்வாகி மரணம் - சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் குழு ஆய்வு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.;
Update: 2024-05-06 06:31 GMT
தடயவியல் நிபுணர் குழு ஆய்வு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் நேற்று (மே 5) தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான குழுவினரும் நேற்று 2-வது நாளாக சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.