பாஜகவை பற்றி இபிஎஸ் பேசினால் கோடநாடு வழக்கை சிபிஜ கையில் எடுக்கும்

பாஜகவை பற்றி பேசினால் கோடநாடு வழக்கை சிபிஜ கையில் எடுக்கும்.அதற்கு பயந்துதான் எடப்பாடி பழனிசாமி பாஜகவை பற்றி பேசாமல் இருக்கிறார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.;

Update: 2024-03-28 01:57 GMT
பாஜகவை பற்றி இபிஎஸ் பேசினால் கோடநாடு வழக்கை சிபிஜ கையில் எடுக்கும்

ஈவிகேஎஸ் இளங்கோவன் 

  • whatsapp icon

ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அறிமுக கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் , மக்கள் குடிப்பதால் கெட்டுப் போவதாகவும் , அவர்களுடைய சிந்தனை மாறி போகிறது என்றும் காங்கிரஸின் கொள்கை ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு தரக்கூடாது என்பது தான் என்றார்.கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர தயாராக இருந்தாலும் அவர்களுக்கே பற்றாக்குறை இருப்பதால் சில தடங்கல்கள் இருப்பதாகவும், காவிரியில் தண்ணீர் அதிகமாக வரும் போது தமிழக முதல்வர் கர்நாடகாவுடன் பேசி தண்ணீர் பெற்று தருவார் என்றார். எடப்பாடி பழனிசாமி கம்பி எண்ண வேண்டியவர் என்ற EVKS இளங்கோவன் , பாஜகவை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசினால் கோடநாடு வழக்கை சிபிஜ கையில் எடுக்கும்.அதற்கு பயந்துதான் பாஜகவை பற்றி பேசாமல் இருக்கிறார் என்றார்.

Tags:    

Similar News