பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் அசாம் மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-24 04:25 GMT
ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயனம் மேற்கொண்டு வரும் நிலையில் ராகுல் காந்தி அவர்களின் நடை பயணத்திற்கு அசாம் மாநில அரசு தடை விதித்தது. இந்நிலையில் இது கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார நகர காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் இளைஞர் காங்கிரஸ் மாணவர் காங்கிரஸ் மகளிர் அணியினர் பிசிசி மற்றும் டிசிசி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஸ்ஸாம் மாநில அரசுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News